ZTAMIL தமிழ் செய்திகள்

அமெரிக்காவின் அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம் ரிக்‌டர் அளவு கோலி்ல் 7.2 ஆக பதிவாகியுள்ளது

Written By Latest News on Friday, 24 June 2011 | 21:43



அமெரி்க்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்க‌ரை மாகாணம் ஆகும். பசிபிக் பெருங்கடல் பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள அலியூட்டைன் எனும் தீவில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அலாஸ்கா பூகம்ப தகவல் பதிவு மையம் தெரிவித்தது. ரிக்‌டர் அளவு கோலி்ல் 7.2 ஆக பதிவாகியுள்ளது.இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த தீவிலிருந்து 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டச் துறைமுகம், 201 கி.மீ.தொலைவில் உள்ள அடோக் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருட்‌ச்சேதம் குறித்த தகவல் இல்லலை. அலாஸ்கா மாகாண பாதுகாப்புப்படை செய்தி தொடர்பாளர் ஜெர்மி ஜிடோக் கூறுகையில், அவசரகால ஒத்துழைப்பு மையம் மூலம் ‌இப்பகுதியை கண்காணித்து வருகிறோம். இப்பகுதி வாழ் மக்களிடம் சுனாமி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment