ZTAMIL தமிழ் செய்திகள்

மாஜி பெண் அமைச்சருக்கு ஆயுள் இனப்படுகொலை வழக்கில்

Written By Latest News on Friday, 24 June 2011 | 21:38

தர்-இ-ஸ்லாம்: இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ருவாண்டா நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவருக்கு ஐ.நா.போர்குற்ற தீர்ப்பாயம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த 1994-ம் ஆண்டு அமைச்சராக பவுலினி-நிராம்ஷூகூகோ (65) பதவி வகித்து வந்தார். ருவாண்டாவி்ல் ஹூட்டு என்ற பயங்கரவாத இனத்தவர்கள் அரசுக்கெதிராக போராடி வந்தனர். இவர்களை ஒடுக்க 80 ஆயிரம் ராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். இதனால் பல ஆயிரம் ‌பேர் படுகொலை செய்யப்பட்டனர். அது மட்டுமின்றி இந்த இனத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டனர். இது தொடர்பாக இவர் மீது போர் குற்றம் மற்றும் இனப்படுகொலை வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதனை ஐ.நா. போர்குற்றம் தொடர்பான தீர்ப்பாயம் விசாரித்து இவர் மீது 11 வழக்‌குகள் பதிவாகின. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் தண்டனை பெற்ற பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment