ZTAMIL தமிழ் செய்திகள்

சி17 ராக்கெட் வரும் 15ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி

Written By Latest News on Thursday, 30 June 2011 | 18:59

பெங்களூரு : பி.எஸ்.எல்.வி.,-சி 17 ராக்கெட்டை, வரும் 15ம் தேதி விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., -சி17 ராக்கெட், வரும் 15ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட், இந்திய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான சி.எஸ்.ஏ.டி.,-12 ஐ, ஏந்திக் கொண்டு, விண்ணில் பறக்கவுள்ளது. இந்த செயற்கைக்கோள், 1,410 கிலோ எடையுடையது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் நிகழ்வு, நான்கு கட்டங்களாக நடத்தப்படும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ளன. ராக்கெட்டின் எலக்ட்ரிகல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் மட்டும், தொடர்ந்து நடந்து வருகின்றன. வரும் 3ம் தேதி, இந்த ராக்கெட்டுடன், செயற்கைக்கோள் இணைக்கப்படும். வரும் 10ம் தேதி, தற்போது வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவு தளத்துக்கு கொண்டு செல்லப்படும். வரும் 13ம் தேதி முதல், 52 மணி நேர கவுன்டவுண் துவங்கும். இவ்வாறு விண்வெளி ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment