ZTAMIL தமிழ் செய்திகள்

President Pratibha Patil ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 6ம் தேதி திருப்பதி வருகிறார்

Written By Latest News on Thursday, 30 June 2011 | 18:56

 ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், வரும் 6ம் தேதி திருப்பதி வருகிறார். டில்லியில் இருந்து, தனி விமானம் மூலம், வரும் 6ம் தேதி மாலை திருப்பதிக்கு வரும் பிரதிபா பாட்டீல், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப்பின், மஹதி ஆடிட்டோரியத்தில் அதிகாரிகளின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6.45 மணிக்கு, திருப்பதியைச் சேர்ந்த ராஷ்டிரிய சேவா சமிதி (ராஸ்) ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில், மகளிர், குழந்தைகள் நலத்துறையின் சிறப்பு மலரை, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வெளியிடுகிறார். பின், விவசாயம் தொடர்பான சிறப்பு மலரை, மாநில கவர்னர் நரசிம்மன் வெளியிட்டு, உரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில், மகளிர் சக்தி மற்றும் "ராஸ்' சமிதியின் சேவைகள் குறித்து பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்துகிறார்.

இரவு 7.15க்கு திருமலைக்கு புறப்பட்டு செல்லும் பிரதிபா, இரவு அங்கு தங்குகிறார். 7ம் தேதி காலை 9.40க்கு திருமலை கோவிலுக்கு சென்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார். பின், 10.20 மணிக்கு, திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை திறந்து வைக்கிறார். 11.10 மணிக்கு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வுக்குப்பின், திருப்பதி விமான நிலையம் சென்று, அங்கிருந்து டில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதியின் இந்த சுற்றுப்பயண விவரங்களை, சித்தூர் மாவட்ட கலெக்டர் சாலமன் ஆரோக்கியராஜ் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment