சாதாரண நடிகராக திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்து, மாஸ் ஹீரோவாகி, அரசியல் கட்சி தொடங்கி, எம்.எல்.ஏ.ஆகி... இப்போது எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி விட்டார் விஜயகாந்த். தேமுதிக என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நேரத்தில், எந்த டி.வி., சேனலும் விஜயகாந்த் பற்றியோ, அவரது கட்சி பற்றியோ செய்தி வெளியிடவில்லை. கட்சித் தலைமையின் அன்றாட நடவடிக்கைகளை தொண்டர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக தனி சேனல் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு கேப்டன் டிவி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் செய்திகள் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்களுடனான சேனலாக ஒளிபரப்பான கேப்டன் டிவியில் பின்னர் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. சாதாரண அரசியல் கட்சியாக இருந்து இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்து விட்ட நிலையில், கட்சிக்கென்று தனி நியூஸ் சேனல் தொடங்க வேண்டும் என நினைத்த விஜயகாந்த், இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம். கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ் போன்று விரைவில் கேப்டன் செய்திகள் என்ற பெயரில் 24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கவுள்ளது கேப்டன் குழுமம். கேப்டன் செய்திகள் சேனலில் விஜயகாந்தின் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி, தேமுதிக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment