ZTAMIL தமிழ் செய்திகள்

தொடர் செய்திகள்

சிக்கல் நீங்கியது தனுஷூன் வேங்கை படத்திற்கு

Written By Latest News on Thursday, 30 June 2011 | 19:17

தனுஷூன், "வேங்கை" படத்தின் தலைப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, "வேங்கை" படத்திற்கான சிக்கல் தீர்ந்தது. ஹரி இயக்கத்தில், தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேங்கை". இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், "வேங்கை" படத்தின் தலைப்பை பயன்படுத்த கூடாது என்று கலைராஜன் என்பவர் சிலதினங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில் எங்களது நிறுவனத்தின் சார்பில், "வேங்கை" என்ற படத்தை தயாரிக்கிறோம். இதுதொடர்பாக இப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளோம். அப்படி இருக்கையில், இப்போது தனுஷ், தமன்னா நடிப்பில் "வேங்கை" என்ற படம் உருவாகியுள்ளது. எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கூறியிருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி, "வேங்கை" படத்தின் தலைப்பை உபயோகப்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வேங்கை படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ஆடியோ ரிலீஸ் கூட நடந்துவிட்டது. இனிபோய் படத்தின் தலைப்பை மாற்றுவது என்பது சாத்தியமற்றது. எனவே வேங்கை படத்தின் தலைப்பை தொடரலாம் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகளின் உத்தரவையடுத்து வேங்கை படத்திற்கான சிக்கல் தீர்ந்தது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
19:17 | 0 comments | Read More

அதிகம் மொபைலில் பேசினால் மூளை புற்றுநோய் வருமாம்

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, மூளை புற்றுநோய் வருவதற்கு ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுவீடன் நாட்டின் ஓரிப்ரோ மற்றும் யுமியா மருத்துவ பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் 1,200 பேரிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். 97லிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அதிகம் மொபைல் போனை பயன்படுத்திய 346 பேர், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர் என கண்டறிந்துள்ளனர்.
மிதமான முறையில் போனை உபயோகித்தவர்கள் நல்ல நிலையில் தான் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என, இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள் தான் அதிகம் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். மூளை புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனை நேரிடையாக காதில் வைப்பதை விட, "ஹெட் செட், இயர்போன்' மூலம் பயன்படுத்தலாம் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதால், மூளை புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம் என, இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
19:10 | 0 comments | Read More

ஏ.டி.எம்.,மில் பணம் ரிசர்வ் வங்கி புது உத்தரவு

ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் போது, பணம் வராமல் தொகை மட்டும் கணக்கில் கழிக்கப்பட்டால், அந்தத் தொகையை, புகார் கொடுத்த ஏழு நாட்களுக்குள் வங்கிகள் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அடுத்த வங்கி ஏ.டி.எம்.,மில் கையிருப்பு எவ்வளவு என பார்த்தாலும், அதுவும் இலவச பரிமாற்றத்தில் ஒன்றாகவே கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: வங்கி கணக்கு வைத்திருப்போர், தங்களின் வங்கி சார்ந்த ஏ.டி.எம்.,களில் மட்டுமல்லாது, பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்கலாம். அதாவது மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இப்படி பணம் எடுக்கலாம்.

அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒரு முறைக்கு 20 ரூபாய் என்ற வீதத்தில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதே நேரத்தில், தங்களது வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என பார்த்தால், அதற்கு கட்டணம் எதுவும் கழிக்கப்பட மாட்டாது. மேலும், இலவசமாக அனுமதிக்கப்பட்ட ஐந்து பரிமாற்றங்கள் கணக்கிலும் இது வராது.

ஆனால், தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தான் வைத்திருக்கும் வங்கி அல்லாது பிற வங்கியின் ஏ.டி.எம்.,யை மாதத்தில் ஐந்து முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என பார்த்தாலும், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தாலும் அது இலவச பரிமாற்றத்தில் கழிக்கப்பட்டு விடும்.

பணம் எடுப்பது, இருப்புத் தொகை எவ்வளவு என பார்ப்பது என, எந்த வகையில், அடுத்த வங்கி ஏ.டி.எம்.,யை பயன்படுத்தினாலும், அதற்கு ஐந்து முறை மட்டுமே இலவச அனுமதியுண்டு. அதற்கு மேல் பயன்படுத்தினால், 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், பணம் எடுக்காமல் மற்ற வகையான நடவடிக்கைகளை அதாவது கையிருப்பு பார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது, பின் நம்பரை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதற்கு ஒரு பரிமாற்றத்திற்கு ரூ.8.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், இலவச பரிமாற்றங்கள், வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாற்றங்கள் இன்று முதல், வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். இது மட்டுமின்றி, அடுத்த வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் போது, பணம் வராமல், தொகை மட்டும் கணக்கில் கழிக்கப்பட்டதால், அந்தத் தொகையை வாடிக்கையாளர் புகார் கொடுத்த 12 நாட்களுக்குள் அவரது கணக்கில் சம்பந்தப்பட்ட வங்கி வரவு வைக்க வேண்டும் என்பது தற்போதைய நடைமுறை.

அது மாற்றப்பட்டு, இனி புகார் கொடுத்த ஏழு நாட்களுக்கும் பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பணத்தை வரவு வைக்க ஏழு நாட்களுக்கு மேல் ஆனால், வாடிக்கையாளருக்கு வங்கியானது 100 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முற்பட்டு, பணம் வராமல் போய், 30 நாட்களுக்குள் புகார் கொடுத்தால் மட்டுமே இந்த விதிமுறை அமலாகும்.

மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் போதும், அவருக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் மூலம் வங்கி செய்தி அனுப்ப வேண்டும். தற்போது குறிப்பிட்ட அளவு பெரிய தொகைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே, இது போன்ற தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இனி, எந்த அளவு தொகை எடுத்தாலும் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19:04 | 0 comments | Read More

சி17 ராக்கெட் வரும் 15ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி

பெங்களூரு : பி.எஸ்.எல்.வி.,-சி 17 ராக்கெட்டை, வரும் 15ம் தேதி விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., -சி17 ராக்கெட், வரும் 15ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட், இந்திய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான சி.எஸ்.ஏ.டி.,-12 ஐ, ஏந்திக் கொண்டு, விண்ணில் பறக்கவுள்ளது. இந்த செயற்கைக்கோள், 1,410 கிலோ எடையுடையது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் நிகழ்வு, நான்கு கட்டங்களாக நடத்தப்படும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ளன. ராக்கெட்டின் எலக்ட்ரிகல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் மட்டும், தொடர்ந்து நடந்து வருகின்றன. வரும் 3ம் தேதி, இந்த ராக்கெட்டுடன், செயற்கைக்கோள் இணைக்கப்படும். வரும் 10ம் தேதி, தற்போது வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவு தளத்துக்கு கொண்டு செல்லப்படும். வரும் 13ம் தேதி முதல், 52 மணி நேர கவுன்டவுண் துவங்கும். இவ்வாறு விண்வெளி ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள் கூறினர்.
18:59 | 0 comments | Read More

President Pratibha Patil ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 6ம் தேதி திருப்பதி வருகிறார்

 ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், வரும் 6ம் தேதி திருப்பதி வருகிறார். டில்லியில் இருந்து, தனி விமானம் மூலம், வரும் 6ம் தேதி மாலை திருப்பதிக்கு வரும் பிரதிபா பாட்டீல், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்குப்பின், மஹதி ஆடிட்டோரியத்தில் அதிகாரிகளின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6.45 மணிக்கு, திருப்பதியைச் சேர்ந்த ராஷ்டிரிய சேவா சமிதி (ராஸ்) ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில், மகளிர், குழந்தைகள் நலத்துறையின் சிறப்பு மலரை, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வெளியிடுகிறார். பின், விவசாயம் தொடர்பான சிறப்பு மலரை, மாநில கவர்னர் நரசிம்மன் வெளியிட்டு, உரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில், மகளிர் சக்தி மற்றும் "ராஸ்' சமிதியின் சேவைகள் குறித்து பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்துகிறார்.

இரவு 7.15க்கு திருமலைக்கு புறப்பட்டு செல்லும் பிரதிபா, இரவு அங்கு தங்குகிறார். 7ம் தேதி காலை 9.40க்கு திருமலை கோவிலுக்கு சென்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார். பின், 10.20 மணிக்கு, திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை திறந்து வைக்கிறார். 11.10 மணிக்கு திருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வுக்குப்பின், திருப்பதி விமான நிலையம் சென்று, அங்கிருந்து டில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதியின் இந்த சுற்றுப்பயண விவரங்களை, சித்தூர் மாவட்ட கலெக்டர் சாலமன் ஆரோக்கியராஜ் வெளியிட்டுள்ளார்.
18:56 | 0 comments | Read More

மந்திரி பதவியில் இன்னும் எத்தனை நாள் தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் விசாரணை

ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது பற்றிய மர்மம் நீடிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், தி.மு.க., வின் முக்கிய முகங்களாக இருந்த ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரை சிறைக்குள் தள்ளி அக்கட்சியை பெரும் இக்கட்டில் தள்ளிவிட்டது. இந்த ஊழல் வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையை விரைவில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது.இதில் தயாநிதியின் பெயர் இடம்பெறலாம் என்று சி.பி.ஐ., வட்டாரங்கள்கூறுகின்றன. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் ஐதராபாத் பயணம் காரணமாக, வரும் 10 ம் தேதி வாக்கில் தான் அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளது. இந்த மாற்றத்தில் தயாநிதி தலை தப்புவது சிரமமே. இந்த சூழ்நிலையில்தான் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தயாநிதி சந்தித்துப் பேசினார். ரேஸ்கோர்ஸ் சாலையின் பிரதமர் இல்லத்தில், மதியம் 12 மணியிலிருந்து 12.15மணிவரை இந்த சந்திப்பு நீடித்தது. பிரதமரை சந்தித்துவிட்டு வந்த தயாநிதி, நேராக தனது அமைச்சகத்திற்கு வந்தார். கடந்த சில நாட்களாகவே அமைச்சரவை பக்கம் வராமல் இருந்த அவர், பிரதமரை சந்தித்துவிட்டு உடனேயே அமைச்சகத்துக்கு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


பிரதமருடனான சந்திப்பு குறித்து தயாநிதி தரப்பு கூறுகையில், "அமைச்சக ரீதியிலான விஷயங்கள்குறித்து பேசப்பட்டது. வழக்கமான சந்திப்பு தான் இது' என்று தெரிவிக்கப்பட்டது. இதே சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சந்திப்பு நடந்தது உண்மை' என்று மட்டும் கூறி நிறுத்திக் கொள்ளப்பட்டது. இருப்பினும்,"ராஜினாமா செய்யச் சொல்லி 10 நாட்களுக்கு முன்பே பிரதமர் தரப்பில் இருந்து தயாநிதிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தும், அதை செய்யாதது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்பதற்காக அழைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. "தற்போது ராஜினாமா செய்யும்படி வலியுறுத்த வேண்டாம்; விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது தானாகவே பதவி போய் விடும்படி செய்து கொள்ளுங்கள்' என பிரதமரிடம், தயாநிதி கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு செய்தி கூறுகிறது.


தயாநிதி மீது கூறப்படும் குற்றச்சாட்டு என்ன? ஸ்பெக்டரம் ஊழல் வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகையை விரைவில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது.இதில் தயாநிதியின் பெயர் இடம்பெறலாம் என்று சி.பி.ஐ., வட்டாரங்கள்கூறுகின்றன.


தயாநிதி, முந்தைய ஆட்சியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அப்போது, ஏர்செல் நிறுவனம் சார்பில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. என்ன காரணத்தினாலோ இந்த ஒதுக்கீடு அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டது. பின், இந்த ஏர்செல் நிறுவனத்தை, மலேசிய கம்பெனி ஒன்று விலை பேசியது. அந்த குறிப்பிட்ட கம்பெனிக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டுமென மறைமுக நெருக்கடி தரப்பட்டது. இதையடுத்து, ஏர்செல் நிறுவனம் தனது பங்குகளை மலேசிய கம்பெனிக்கு விற்றது. அவ்வளவு நாட்களாக அளிக்கப்படாத ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, இந்த கம்பெனி விற்பனை நடந்து முடிந்ததும் அளிக்கப்பட்டது. இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்த உடனேயே தயாநிதியின் சகோதரரான கலாநிதிக்கு சொந்தமான, "சன் டைரக்ட்' குழுமத்தில், ரூ.600 கோடி வரையில் அந்த மலேசிய கம்பெனி முதலீடு செய்தது. ஸ்பெக்ட்ரம் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் வழங்காமல், வேண்டுமென்றே நெருக்கடி அளித்து கம்பெனியை விற்பனை செய்ய வைத்து, அதன் பிறகு உடனேயே ஸ்பெக்ட்ரத்தை வழங்கி, அதற்கு பிரதிபலனாக ரூ.600 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தயாநிதி தரப்பு மறுத்து வந்தாலும், ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரன் தரப்பு உறுதியில் இருக்கிறது. நடந்த அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் விரிவான வாக்குமூலமாக அளித்துவிட்டார். இதுதவிர, பி.எஸ்.என்.எல்., போன் இணைப்புகள் பலவற்றை தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதும் அம்பலமாகி தயாநிதிக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது.
Prime Minister Manmohan Singh Dayanidhi trial: Minister, how many more days in office
18:50 | 0 comments | Read More

சைக்கிள் ஓட்டினால் துணிகளை துவைத்து விடலாம்

Written By Latest News on Sunday, 26 June 2011 | 19:25


இங்கிலாந்தின் சவுத்யார்க்ஷயர் நகரில் உள்ள ஷெபீல்டு ஹல்லம் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர் ரிச்சர்டு ஹெவிட்(21). இவர் சூப்பர் வாஷிங் மெஷினை வடிவமைத்திருக்கிறார்.
பொதுவாக தண்ணீர், பவுடர், துணிகளை போட்டதும் என்ன செய்வார்கள். சுவிட்சை ஓன் செய்து சுழல விடுவார்கள். இந்த மெஷினுக்கு மின்சாரம், பற்றரி தேவையில்லை.
வித்தியாசமான முறையில் சைக்கிளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது வாஷிங் மெஷின். சைக்கிள் ஓட ஓட அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வாஷிங் மெஷினின் உள்பகுதி சுழல்கிறது.
துவைக்க வேண்டியதை போட்டதும் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார் ரிச்சர்டு. 10 நிமிடம் ரவுண்டு போய்விட்டு வீடு திரும்புகிறார். அவ்வளவு தான் முதல் ரவுண்டு தோய்க்கும் வேலை முடிந்தது. அழுக்கு தண்ணீரை கொட்டிவிட்டு நல்ல தண்ணீர் நிரப்புகிறார்.
சைக்கிளில் இன்னொரு ரவுண்டு. துணிகளை எடுத்து "டிரையர்" பகுதியில் போட்டுக் கொண்டு சைக்கிளில் மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு வந்தால் காய்ந்து விடுகிறது. இந்த ஐடியா உருவான பிளாஷ்பேக்கை பகிர்ந்து கொள்கிறார் ரிச்சர்டு.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆப்ரிக்க நாடான புருண்டிக்கு போன போது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்றேன். சேவை செய்ய விரும்பி குழந்தைகளின் துணிகளை தோய்த்து போட்டேன். மொத்தம் 30 லோடு. கை அசந்துவிட்டது.
வாஷிங் வேலையை எளிதாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சைக்கிள் சக்கரத்தின் சுழற்சியிலேயே இயங்கும் வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளேன். ஷெபீல்டு பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள "க்ரியேட்டிவ் ஸ்பார்க்" கண்காட்சியில் இதுவும் இடம்பெறுகிறது.
19:25 | 0 comments | Read More

மெர்சிடிஸ் 2014ல் ஹைட்ரஜன் எரிபொருளில் ஓடும் கார்

சுற்றுச்சூழலுக்கு துளியும் தீங்கு விளைவிக்காத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் ஓடும் காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

மாற்று எரிபொருளில் ஓடும் கார்களை தயாரிக்க பல முன்னணி கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், ஹைட்ரஜன் வாயுவில் ஓடும் காரை தயாரிக்கும் பணியில் ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பொதுவாக, ஹைட்ரஜன் கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் பல அபாயங்கள் இருப்பதால், பல நிறுவனங்கள் இந்த வகை கார்களை தயாரிக்க தயக்கம் காட்டி வருகின்றன.

மேலும், ஹைட்ரஜன் பங்குகளில் ஸ்டோரேஜ் செய்வதிலும், கையாள்வதிலும் பல பிரச்னைகளும், வெடிக்கும் அபாயம் இருப்பதாலும் இந்த வகை கார்கள் சந்தையில் வெற்றி பெற வைப்பது என்பதும் கார் நிறுவனங்களின் தயக்கத்திற்கு காரணம்.

அதேவேளை, ஹைட்ரஜன் கார்களிலிருந்து வெளிப்படும் புகை எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டதால், சுற்றுச்சூழலுக்கு துளியும் தீங்கு ஏற்படுத்தாது என்பது இதன் மிகப்பெரிய பலம்.

இதனால், அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பிரத்யேக உதிரிபாகங்களை பயன்படுத்தி ஹைட்ரஜன் காரை தயாரிக்கும் பணியில் மெர்சிடிஸ் பென்ஸ் வடிவமைப்பு வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வரும் 2014ம் ஆண்டுக்குள் இந்த காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மெர்சிடிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
19:21 | 0 comments | Read More

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்

ஐஸ்வர்யா ராய்க்கு நிச்சயமாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ‌ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன பின்னரும், குழந்தை வேண்டாம் என்று நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக, அவரது மாமனாரும், பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். ஐஸ்வர்யா ராய், அம்மாவாக போவதை அறிந்து பாலிவுட் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் ஐஸ்வர்யாவுக்கு, இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கணித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா ராய், 2011ம் ஆண்டு கர்ப்பம் அடைவார் என்று முன்கூட்டியே கணித்து இருந்தேன். அது இப்போது நிஜமாகிவிட்டது. அதேபோல் அவருக்கு நிச்சயம் பெண் குழந்தை அல்லது இரட்டை குழந்தை தான் பிறக்கும். ஏனென்றால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் ராசி எண் 5, ஆகையால் அவருக்கு கண்டிப்பாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று அடித்து கூறுகிறார்.
19:14 | 0 comments | Read More

விஜய்யின் போக்கிரி பட தயாரிப்பாளர் கைது(vijai)

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ரமேஷ். தமிழில் விஜய் நடித்த "போக்கிரி" உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். சமீபத்திய இவர் தயாரித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் தமிழில், டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக்ரம், தீக்ஷா செத் நடிக்கும் "ராஜபாட்டை" என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் வைத்து ரமேஷை, ஆந்திர புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது, ஆந்திராவில் வை‌ஜெயந்தி ரெட்டி என்பவரிடம் ரூ.18கோடி வரை கடன் வாங்கி‌ய ரமேஷ், ரூ.3.5 கோடியை மட்டும் திருப்பி செலுத்தியிருக்கிறார். மீதி தொகையை வைஜெயந்தி திருப்பி கேட்ட போது, பிரபல ரவுடி பானு கிரண் மூலம் அவரை மிரட்டியிருக்கிறார் ரமேஷ். பானு கிரண் மீது ஏற்கனவே சூரி கொலை வழக்கு உட்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் பானு கிரணுக்கு, ரமேஷ் ரகசியமாக பல உதவிகள் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரமேஷை ஆந்திர புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
19:12 | 0 comments | Read More

தேசியகீதம் தேசப்பற்றை வளர்க்க புது முயற்சி தியேட்டர்களில் (New effort to develop)


சேலம்: சேலத்தில், பெரும்பாலான தியேட்டர்களில், திரைப்படம் ஆரம்பிக்கும் முன், தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது. தியேட்டருக்கு வரும் மக்கள், எழுந்து நின்று நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகின்றனர். இந்த புதிய முயற்சி, அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.சுதந்திர தினம், குடியரசு தினம் மட்டுமின்றி அரசு விழாக்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது.தற்போது, தியேட்டர்களில் ஒ(ளி)லிபரப்பாகும் தேசிய கீதம், அனைத்து தரப்பினரிடத்திலும் சென்றடைந்துள்ளது. சேலம், கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில், நவீனமயமான தியேட்டர்களில், காலைக்காட்சி ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது. ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்ற வாசகமும் ஒளிபரப்பாகிறது.தொடர்ந்து, ஜன கன மன பாடல் ஒலிக்க, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நின்று இந்திய தாய்க்கு மரியாதை செலுத்தும் காட்சி, படம் பார்க்க வந்தோரை மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டுப்பற்றை வளர்க்கும் இந்த முயற்சி, அனைத்து தரப்பிலும் இருக்க வேண்டும்.சேலத்தில் தியேட்டர் நிர்வாகிகளிடம் கேட்டபோது, "தியேட்டர்களில் தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தியேட்டர்களில், காலைக்காட்சி ஆரம்பிக்கும் முன் ஒளிபரப்புவோம். பொதுமக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்' என்றனர்.
19:07 | 0 comments | Read More

மழைநீர் சேமிப்பு திட்டம் புத்துயிர் பெறுகிறது(Stormwater Storage Project)

Stormwater Storage Project,
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம், பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க அரசு ஆலோசித்து வருகிறது.இந்தியாவில் தமிழகம், ராஜஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. முன்பு 10 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர், இன்று 100 மீட்டர் ஆழத்தில் கூட கிடைப்பதில்லை. பொதுவாக, ஓராண்டில் எவ்வளவு மழை பெய்கிறதோ அந்த அளவு தான் நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டும். ஆனால், 10 லிட்டர் மழைநீர் சேமித்தால், 12 லிட்டரை நாம் உறிஞ்சுகிறோம். இதை கருத்தில் கொண்டு, 2001-06 அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தியது.
அரசு, தனியார் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டாயமாக்கப்பட்டது. புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே உள்ளாட்சிகள் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் போர்வெல், கிணறுகள் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. சட்டம் போட்டு விட்டனரே என கருதிய சிலர், பெயருக்கு மழைநீர் தொட்டிகளை அமைத்தனர். அரசு கட்டடங்களில் அமைக்கப்பட்ட தொட்டிகளே இதற்கு சாட்சி. ஆயினும், அதிகளவு மழைநீர் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டம் (2003) இயற்றப்பட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்தல் மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல உரிமம் பெறுதல்; வீடுகளில் ஒரு எச்.பி., திறனுக்கு குறைவான மின்மோட்டார்களை பயன்படுத்துதல்; கிணறுகள், போர்வெல்களை குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஆழப்படுத்துவதை கட்டுப்படுத்துதல்; கண்காணிக்க நிலத்தடி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்தல்; தேவையான பகுதிகளில் மட்டும் சட்டத்தை அமல்படுத்துதல் என்பன உட்பட பல்வேறு விஷயங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றன. சட்டம் அமலுக்கு வர தாமதமானது. 2006ல் ஆட்சி மாறியது.

தி.மு.க., ஆட்சியில் (2006-11) மழைநீர் சேமிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்ட து. கட்டடங்களில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு அமைப்புகள் பராமரிக்கப்படவில்லை. அவை மழைநீரை சேமிக்கும் சக்தியை இழந்தன. தமிழகத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மேலும், தி.மு.க., ஆட்சியில் நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டப்படி ஆய்வு செய்யப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் 85 சதவீதம் கிணறு, போர்வெல்களை பயன்படுத்துகின்றனர். மீதி 15 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன என தெரியவந்தது. விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு வரலாம் என கருதி சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டம் பற்றி ஆராய்ந்து, அதை மேலும் சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. மண்ணின் தன்மைக்கேற்ப முறைப்படி அமைத்தால் தான் நோக்கம் நிறைவேறும். மழையின் போது ரோடுகளில் வீணாகும் நீரையும் சேமிக்க திட்டமிட வேண்டும். நிலத்தடி நீர் மேலாண்மை சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். நபார்டு மானியம்: தமிழகத்தில் 18 லட்சம் பாசன கிணறுகள் உள்ளன. இவற்றின் நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைக்க, மத்திய அரசு நபார்டு மூலம் சிறு விவசாயிகளுக்கு 4,000 ரூபாய், பெரிய விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் மானியம் வழங்கியது. சிலர் பெயரளவிற்கு அமைத்ததோடு சரி. விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லாததால், இந்நிதியின் பெரும்பகுதி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

நன்றி
தினமலர்
18:56 | 0 comments | Read More

பொது சமூக சேவையில் ஆர்வம் காட்டும் கார்த்தி(Actor Karthi)

Written By Latest News on Saturday, 25 June 2011 | 19:26

 பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என்று ஹிட் படங்களாக கொடுத்து முன்னணி நடிகராக மாறி, மிக குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த கார்த்தி, இப்போது எல்.எஸ்.டி.எஸ்.எஸ்., அமைப்போடு சேர்ந்து, சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.  குறிப்பிட்ட நோயாளிகள் குழுவுடன் இணைந்து அவர்களுக்கு முறையான நோய் காரணி அறிதல் மற்றும் சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவ முன் வந்துள்ளார். புதிய மரபியல் நோயான திசு உள் செரிமானச் சேமிப்புக் கோளாறினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக உதவி செய்யும் இந்த அமைப்பு சுருக்கமாக எல்.எஸ்.டி.எஸ்.எஸ்., என்று அழைக்கப்படும்.

இதுகுறித்து கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, குழந்தைகள் தங்கள் சின்னஞ் சிறு வயதிலேயே இதுபோன்ற கொடுமையான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டு என் நெஞ்சம் படபடத்தது. இவர்களுக்கு உதவும் நோக்கோடு இந்த அமைப்பில் என்னை இணைத்து கொண்டேன். இந்த நோய் குறித்த முறையான விழிப்புணர்வு, பரிசோதனை வசதிகள், சிகிச்சைக்கான நிதி உதவி ஆகியவை மிகவும் அவசியம். என்னுடைய ஆரோக்கியமான ஈடுபாடு மூலம், இந்த குழந்தைகளுக்கு இயன்ற உதவிகளை செய்ய முன்‌வருவேன். இதன்மூலம் இந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவரும், பாம்ப் எனப்படும் ஒரு வகை எல்.எஸ்.டி., நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது 12வயது குழந்தையின் தந்தையான பிரசன்ன குமார் ஷிரோல் பேசுகையில், நோயாளிகளையும், அவர்களது குடும்பங்களையும் இணைத்து தேவையான ஆதரவை பெறுவதற்காக கடந்த ஆண்டு இந்த அமைப்பினை தொடங்கினோம். இந்த அமைப்பில் கார்த்தியும் சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற எங்களின் நோக்கம் வெற்றி பெற இந்த இணைந்த செயல்பாடு ஒரு குறிப்பிடத்தக்க முனைவாகும் என்றார்.

எல்.எஸ்.டி., என்று அழைக்கப்படும் இந்தநோய் உடலியக்கத்தை பாதிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தையும் விளைவிக்க கூடியது. உடலில் உள்ள உயிர்வினை ஊக்கியின் செயலற்ற தன்மை காரணமாக இதுபோன்று 45விதமான எல்.எஸ்.டி.,க்கள் தோன்றுகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கார்த்தி இந்த அமைப்போடு தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
19:26 | 0 comments | Read More

10 பேர் பலி தற்கொலைப்படை தாக்குதல்

 இஸ்லாமாபாத்:இஸ்லாமாபாத்தில் போலீஸ்டேஷனில் நடந்த தற்கொலைப்படைதாக்குதலில் 10 போலீசார் பலியானார்கள். பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள குலாச்சி அருகே உள்ள போலீஸ்டேஷனில் நேற்று தற்கொலைப்படை நடத்திய திடீர் தாக்குதலில் ‌10 போலீசார் பலியாயினர். இது குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஜாவ்த் கான் ககூறியதாவது: தாக்குதல் நடத்தியவர்களில் 3 ‌பேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.ஒசாமா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கமாக இந்த தாக்குதல் இருக்கலாம் என்றார்.
19:16 | 0 comments | Read More

பொக்கிஷம் கடல் வெள்ளரி எதிரிகளுக்கு உணவாக தன் குடலையே தரும் அரிய இனம்

ராமநாதபுரம் : எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீனினங்கள், மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடலடியில் வாழ்வியல் பிரச்னைகள், உணவிற்கு போராட்டம், பாதுகாப்பின்மை என எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், அவற்றை தாக்கு பிடிக்கும் திறன்கள் பல உயிரினங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவைகளின் உத்திகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதில் பல வினோதங்கள் மீனனிங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது. இத்தகை சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீனிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்.
19:11 | 0 comments | Read More

அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்,பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு

 சென்னை : "பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். ம.தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விலை உயர்வு, மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடியது என, மத்திய அமைச்சர் கூறியிருப்பது விந்தையாக உள்ளது. கூலி வேலைக்குப் போனால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டால், பற்றாக்குறையை ஈடுகட்ட எங்கே போவது? மக்கள் நல அரசுக்கு இலக்கணம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். வறுமையில் வாட்டுவதாக இருக்கக் கூடாது.
தண்டச் செலவையும், தேவையற்ற திட்டங்களுக்கான செலவையும், இந்திய அரசு தவிர்த்தாலே, விலை உயர்வுக்கு அவசியம் ஏற்படாது. அதைவிட்டு, மக்களின் மேல் கூடுதல் செலவை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு மட்டுமின்றி, கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட விலை உயர்வையும், திரும்பப் பெற வேண்டும். அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட, மக்களை வாட்டி எடுப்பது உண்மையான ஜனநாயகம் ஆகாது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: இந்த விலையேற்றம், எண்ணெய் நிறுவனங்கள் மக்களை சுரண்டி கொள்ளை அடிப்பதற்கான அநியாய ஏற்பாடாகும். விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, ம.தி.மு.க., சார்பில் 28ம் தேதி மாலை 3 மணிக்கு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஏழை மக்கள் மீது, அரசுக்கு இரக்கம் இல்லையோ என்ற அளவிற்கு, விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, மறுக்க முடியாத உண்மை. இதை சமாளிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்துக் கொள்வது, தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் கூடுதல் வரி வசூலிப்பது, ஆடம்பர வாகனங்கள் மீதான வரியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதை செய்யாமல், ஏழை மக்களின் மடியில் கை வைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இ.கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன்: டீசல், காஸ் விலை உயர்வு, ஏற்கனவே விலைவாசி உயர்வால் அல்லல்படும் சாதாரண மக்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல். முக்கிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், டீசல், காஸ் விலை உயர்வு, மீண்டும் அனைத்துப் பொருட்களின் விலையை உயர்த்தும். ஏழை, எளிய மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19:07 | 0 comments | Read More

ஆன்ட்ராய்டுடன் டியூவல் சிம் போன் ஸ்பைஸ் புதிய அறிமுகம்(Android Mobile)

டெல்லி: மொபைல்போன் உலகில் முன்னிலை வகிக்கும் ஸ்பைஸ் நிறுவனம், ஆன்ட்ராய்டுடன் கூடிய டியூவல் சிம் மொபைல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ் எம்ஐ270 என்ற பெயருடன் சந்தைக்கு வந்துள்ள இந்த புதிய போனில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களும் உள்ளது.

ஸ்பைஸ் எம்ஐ 270 போனில் ஆன்ட்ராய்டு ப்ரோயோ 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

2.8 டச் ஸ்கிரீன் அப்ளிகேஷன்களை எளிதாக இயக்கும் வகையில் உள்ளது.

யுஎஸ்பி போர்ட், வை-பை, புளூடூத் உள்ளிட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளையும், ஜிபிஎஸ் வசதியையும் பெறலாம்

இதில் 1000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி அருமையான பேக்கப்பை தருகிறது. 3 மணிநேரம் டாக்டைம் மற்றும் 320 மணிநேரம் பேக்கப்பும் தருகிறது.

ஸ்பைஸ் எம்ஐ 270 சிறப்பம்சங்கள்: (Android Mobile)

600 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் பிராசஸர்

டியூவல் சிம்/ஸ்டான்ட் பை மோடு ஆப்சன்

2.8 இஞ்ச் தொடுதிரை (டச் ஸ்கிரீன்)

மோனோடைப் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்

3.5மிமீ ஆடியோ அவுட்புட் ஸ்லாட்

எப் ரேடியோ மற்றும் ரெக்கார்டிங் வசதி

2 மெகாபிக்செல் கேமரா

16 ஜிபி வரை எக்ஸ்டன்டபிள் மெமரி கார்டு பொருத்தும் வசதி

ஆன்ட்ராய்டு ஓஎஸ் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் ரூ.5,700 விலையில் ஸ்பைஸ் எம்ஐ 270 விற்பனைக்கு வந்துள்ளது.
09:27 | 0 comments | Read More

திரை விமர்சனம் நூற்றெண்பது


கங்கை ஆற்றங்கரையில் தன் தந்தையின் இறுதிக்காரியங்களை செய்கிறார் மனோவாக வரும் சித்தார்த். அதே போல ஒரு சிறுவனும் அவனது தந்தைக்கு இறுதிக்காரியங்களை செய்கிறான்.
அது முடிந்ததும் தனது பொம்மை காரோடு விளையாடப் போய்விடுகிறான். இதைக் காணும் மனோ, வாழ்க்கையில் மரணம் என்பது வரத்தான் செய்யும், ஆதலால் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறார்.
சென்னைக்கு வரும் மனோ மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பத்திரிகை நிருபராக இருக்கும் வித்யா (நித்யா மேனன்) மனோவை சந்திக்கிறார். சில சந்திப்புகளில் மனோ மேல் காதல் கொள்கிறார் வித்யா. தன் காதலை மனோவிடம் சொல்ல, அதை சில காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார். அவரை ஒதுக்கவும் செய்கிறார்.
இதனிடையே ஒரு ஆக்சிடெண்டில் வித்யா சிக்கிக் கொள்கிறார். அவரது மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கூட்டிச் செல்லும் பொறுப்பு மனோவின் மேல் விழுகிறது. வேறு வழியின்றி கூட்டிச் செல்கிறார்.
அப்போது ஒரு பிளாஷ் பேக் வருகிறது – அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் மருத்துவராக பணியாற்றுகிறார் அஜய் (சித்தார்த்). அங்கு ரேணுகாவை (பிரியா ஆனந்த்) சந்திக்கிறார். இருவருக்கும் பிடித்துப் போகவே திருமணம் செய்துகொள்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு அஜய் தற்கொலை செய்துகொள்கிறார். - பிளாஷ்பேக் முடிகிறது.
மனோ அமெரிக்காவிற்கு வித்யாவோடு வருகிறார். அங்கே அவரை ரேணுகா பார்த்து விடுகிறார்.
மனோ, வித்யாவின் காதலை ஏன் மறுத்தார்? அஜய் தற்கொலை செய்து கொண்டது ஏன்? ரேணுகாவின் நிலை என்ன? என்பதை சுவாரசியமாகக் காட்டி சுபம் போட்டிருக்கிறார்கள்.
சென்னை மாடர்ன் பையன் மனோவாக வருவதிலும், அமெரிக்க மருத்துவர் அஜயாக வருவதிலும் வித்தியாசத்தைக் காட்டி நடித்திருப்பதில் சபாஷ் வாங்குகிறார் சித்தார்த்.
பிரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் அசத்துகிறார்கள். காதல் வயப்படும் காட்சிகளில் நித்யா மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால், தன் கணவனை மீண்டும் காணும் போது ஏற்படும் உணர்ச்சிகளை பிரியா ஆனந்த் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நடிகர் சந்திரமௌலி தன்பங்கிற்கு தனது காட்சிகளை நிறைவாகச் செய்திருக்கிறார்.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 180 டிகிரி கோணங்களைப் போல அவரது கேமரா கங்கை, சென்னை, அமெரிக்கா என கண்டம் தாண்டியும், கடல் தாண்டியும் விரிகிறது. காட்சிகள் கண்களில் நிறைகிறது.
ரெட் டிஜிட்டல் கேமராவில் சுட்டுத் தள்ளிய காட்சிகள் அனைத்தும், நேரில் பார்த்து ரசிப்பது போல் நம் கண்களில் இயல்பான காட்சிகளாக விரிகிறது. ஷரத்தின் பின்னணி இசை படத்திற்கு இதமாய் இருக்கிறது. பாடல்களும் நன்று.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. அந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லை என்றே சொல்லவேண்டும். சுபாவின் வசனங்கள் சில இடங்களில் கைதட்ட வைக்கின்றன.
மொத்ததில் நகரவாசிகளை ரசிக்க வைக்கும் படமாக நூற்றெண்பதை வடிமைத்திருக்கிறார் இயக்குனர் ஜெயேந்திரா.
09:14 | 0 comments | Read More

ஜித்தன் ரமேஷ் பிள்ளையார் தெரு கடைசி வீடு திரைவிமர்சனம்


ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவாவின் அண்ணன், இவர் ஜித்தன் மற்றும் மதுரை வீரன் படத்தின் மூலம் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள"பிள்ளையார் தெரு கடைசி வீடு" படத்தை இயக்குனர் திருமலை கிஷோர் அவர்கள், ஒரு கிராம கதையை மையமாகவைத்து, இளகிய மனம் படைத்த ஒரு இளைஞன், அவரது அன்பான குடும்பம், நண்பர்கள் மற்றும் அவரது காதலை சேர்த்து குதூகலமிக்க ஒரு குடும்ப பாங்கான திரைபடத்தை இயக்கியுள்ளார்.
கணேஷாக வரும் (ஜித்தன் ரமேஷ்) ஒரு பெரிய பண்ணையாரின் மகனாக வருகிறார். அவருடைய முழுபொழுதுபோக்கு மற்றும் தலையாய பொறுப்பாக அவர் கருதுவது தனது கிராமத்து நண்பர்களுடன் குடித்து பொழுதைகழிப்பதும், ஜல்சா படங்களுக்கு செல்வது மற்றும் கிராமத்தினரிடையே சிறு சிறு கலகங்களை உண்டுபண்ணுவதையே தனது வாழ்கையின் லட்சியமாக கருதுகிறார்.
ஒரு அதிகாலையில், இவர் ஒரு இடத்திற்கு செல்ல வேகமாக முற்படும் பொழுது சந்தியாவை (சஞ்சிதபடுகோனே) இடித்து விடுகிறார்.முதல் பார்வையிலேயே காதல் வயபடுகிறார். மேலும் கணேஷுக்கு சந்தியா தனது தங்கையின் தோழி என்றும் அவர் நகரத்தில் இருந்து தனது வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் தனது காதல் கைகூடும் என்று நம்புகிறார்.
மேலும் கணேஷ் தன்னை தானே, ஒரு வழிகாட்டியாக கூறிக்கொண்டு சந்தியாவை கிராமத்தின் நாலாபுறமும்அழைத்துச்சென்று மகிழ்ச்சி அடைகிறார் . கணேஷின் மாமாவாக வரும் இளவரசு ஒரு குடிகாராகவும், மிகுந்த கடனாளியாகவும் வருகிறார். அவர் தொடர்ந்து கணேஷின் அத்தை மற்றும் மகள் வள்ளி (சுஹாசினி) இருவரையும் காரணமில்லாமல் திட்டிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் கணேஷின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷின் மீதுள்ள மரியாதை நிமித்தமாக இதை பொறுத்து கொள்கிறார். குடிகார மாமா கணேஷின் தந்தையையும் விட்டுவைக்க வில்லை, அவரையும் காரணமில்லாமல் வசைபாடுகிறார். கணேஷின் அத்தை குடும்பம், கணேஷுக்கும் அவரது தந்தைக்கும் உறுதுணையாக உள்ளார்கள். சிறிது நாட்களுக்குள், சந்தியாவும் கணேஷின் மீது கொண்டுள்ள காதலை உணர்கிறார், ஆனால் தன்னுடைய காதலை வெளிபடுத்தாமல் தக்க சந்தர்பத்திற்காக காத்திருக்கிறார்.
கதை இவ்வாறாக நகர்ந்து கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத விதமாக கணேஷின் மாமா தனது மகளை ஒரு உள்ளூர் ரௌடிக்கு திருமணம் செய்துவைக்க பார்க்கிறார். இதற்கு பிரதிபலனாக தனது கடன் அனைத்தையும் முழுமையாக தீர்த்து விடலாம் என்று எண்ணுகிறார். இதை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியாத கணேஷின் அத்தையும் மகள் வள்ளியும், கணேஷின் தந்தை உதவியை நாடுகிறார்கள்.
குடிகார அப்பனிடமிருந்து வள்ளியை காப்பாற்ற இருக்கும் ஒரே நிரந்தர தீர்வாக கணேஷின் குடும்பம் நினைப்பது,கணேஷுக்கும் வள்ளிக்கும் மணம் முடிப்பது என்று முடிவு செய்கிறார்கள். இந்த முடிவு, கணேஷ் இல்லாத நேரத்தில் எடுக்கப்படுகிறது. இது தனது காதலை வெளிபடுத்த சந்தர்பத்தை எதிர்நோக்கி இருக்கும் சந்தியாவிற்கு பேரிடியாக விழுகிறது.
சந்தியா கணேஷின் மீதுள்ள காதலுக்கும் , அவரது குடும்பத்தின் மீதுள்ள பாசத்திற்கும் இடையே ஒரு போராட்டத்தை நடத்துகிறார், இதில் இவர் எதை தேர்ந்தெடுக்க போகிறார் ? மேலும் சந்தியா ஒரு எதிர்பாராத ஆச்சிரியபடதக்க முடிவு எடுக்கிறார். அந்த முடிவு என்ன? கணேஷ் சந்தியாவை மணந்தாரா இல்லை வள்ளியை மணந்தாரா? கணேஷ் உண்மையிலேயே ஒரு இளகிய மணம் படைத்தவர் தானா இல்லை அவருக்குள் ஏதேனும் ரகசியம் புதைந்து கிடைகிறதா? அது அவருடைய குடும்பத்தை உலுக்குவதாக அமையுமா? பதில்வெள்ளித்திரையில்......................
இந்த படத்தின் கதைகளம் ஏற்கனவே பல முறை பயணிக்கப்பட்ட கதையாக இருந்தாலும் இயக்குனர் திருமலைகிஷோர் தனக்கென தனி யுக்தியை கையாண்டு கதையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். இதனால் இக்கதை, இதுபோல் வந்த படங்களில் இருந்து தனித்து தருகிறது.
ஜித்தன் ரமேஷுக்கு இந்த படம் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு மறு அவதாரம் என்றே கூற வேண்டும்.அவர் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. சஞ்சித படுகூனே கன்னடத்தில் ஒரு வலம் வந்திருந்தாலும்,அவருடைய கதாபாத்திரம் புதுமுகம் சுஹாசினியை ஒப்பிடும் பொழுது சற்று குறைவாகவே உள்ளது. கணேஷின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷ் இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். மாமாவாகவரும் இளவரசு, தனது இயல்பான நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் .
பன்னிர்செல்வத்தின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்தின் வனப்பையும், செழுமையையும் மிக சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். எ. ஆர். மோகனின் கலைத்தன்மையின் அமைந்த வீடே படத்தின் தலைப்பாக கிடைத்தது பெருமை. பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு நமது செவிகளில் ரிங்காரம் இடவில்லை. காமெடியும் சுமார் ரகம் தான்.இதனை தவிர்த்து "பிள்ளையார் தெரு கடைசி வீடு" குடும்பத்தோடு கண்டுகளிக்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர்கள் : ஜித்தன் ரமேஷ், சஞ்சித படுகோனே, சுஹாசினி, ஜெயா பிரகாஷ், இளவரசு, சூரி, துளசி, அகிலா.
இயக்கம் : திருமலை கிஷோர்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்: ஆர். பி. சௌத்ரி.
இசை : சக்ரி
ஒளிப்பதிவு: எம். வி. பன்னிர்செல்வம்
எடிட்டிங் : வி. ஜெய் சங்கர்
எழுத்து: நாகராஜன், திருமலை கிஷோர்
சான்றிதழ் : யு .
09:10 | 0 comments | Read More

அருள்நிதியின் உதயன் திரை விமர்சனம்


மதுரையில் பெரிய தாதாவாக விளங்கும் ஆசிஸ் வித்யார்த்தின் வீட்டில் ஒரு கொலை நடந்து விடுகிறது அந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஆசிஸ் வித்யார்த்தின்
கும்பலை சேர்ந்தவர்கள் ஊர் ஊராக தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்.
ஆசிஸ் வித்யார்த்தின் கும்பலானது ஒவ்வொரு ஊரிலிருக்கும் முக்கிய ரவுடிகளிடமும், தன் வீட்டில் நடந்த கொலைக்கு யார் காரணம் என்று மிரட்டுகிறார்கள். அனைவரும் பயத்தில் தான் இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இறுதியாக ஆசிஸ் வித்யார்த்தி அப்பு என்ற ரவுடிதான் அதற்கு காரணம் என்று கண்டு பிடித்து சென்னையை வந்தடைகிறார்.
இந்த படத்தில், வசந்த் என்ற கதாபாபாத்திரமாக வருகிறார் அருள்நிதி. இவர் ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக ( Assitant Manager ) பணிபுரிகிறார். அறிமுக நாயகியாக பி்ரணிதா, பிரியா என்ற கதாபாத்திரத்தில் இணைய தள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த இரண்டு பெயருக்கும் இடையேயான முதல் சந்திப்பு சிறு விபத்தில் நிகழ்கிறது. அதாவது, அருள்நிதி சென்று கொண்டிருக்கும் பைக் எதிர்பாரத விதமாக பி்ரணிதாவின் பைக்கின் மீது மோதுகிறது. அதிர்ச்சியில் திரும்பி பார்க்கும் பி்ரணிதாவின் முதல் பார்வையிலே, தன் மனதை பறிகொடுத்துவிடுகிறார்.
இச்சந்திப்பை தொடர்ந்து அருள்நிதி, பி்ரணிதாவின் வண்டியை தொடர்ந்து சென்று தான் உன்னை மணக்க விரும்புவதாக .கூறும்போது அதை நிராகரிக்கிறார் பி்ரணிதா. இருந்தாலும், தன் தொடர் முயற்சியில் காதலில் வெற்றி பெறுகிறார் அருள்நிதி.
இந்நிலையில் பி்ரணிதாவின் தந்தை, அப்பு என்ற ஒரு தாதாவிடம் ஆடிட்டராக பணியாற்றுகிறார். ஒரு சமயத்தில் இவர்களின் காதல் பி்ரணிதாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. அதனால் அப்புவிடம் தன் மகளின் காதலை சொல்லி "அந்த பையனை கொஞ்சம் கண்டித்து வைங்க" என்று சொல்ல ரவுடி அப்பு தன் தம்பியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார் ,அண்ணன் சொல்லியதால் அருள் நிதியை மிரட்ட அப்புவின் தம்பி செல்கிறார்
எதிர்பாராத விதமாக அந்த கும்பலில் ஒருவன் இவன் தான் நம்ம அண்ணனை அடிச்சவன் என்று சொல்வதால் கோபப் படும் அப்புவின் தம்பி அருள் நிதியை கத்தியால் குத்தி விட அதே சமயம் அங்கு வரும் ஆசிஸ் வித்யார்த்தி அப்புவின் தம்பியை வெட்டி விடுகிறார் , அருள் நிதி ஆசிஸ் வித்யார்த்தியை அப்பா என்று சொல்லி மயக்கம்முற இடைவேளை வருகிறது .
அதற்கு பின் அருள் நிதியின் பிளாஷ் பேக் ஆரம்ப மாகிறது ,இரட்டை வேடத்தில் அருள் நிதி நடித்திருக்கிறார் ,ஊரில் அப்பாவை போலவே ரவுடி தனம் செய்யும் உதயனாக ஒரு வேடத்தில் அருள்நிதி ,தன் அண்ணன் மற்றும் அப்பாவின் செயல்களை வெறுக்கும் மற்றொரு வேடத்திலும் நடித்திருக்கிறார். ஒரு சந்திப்பில் அப்புவிடம் ஏற்படும் சண்டையில் அப்புவை அவமான படுத்துகிறார் உதயன் அதற்கு பழி வாங்க அப்பு உதயனை கொலை செய்து விடுகிறார் , அதனால் வெறுப்பு அடையும் அருள் நிதி யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு வந்து விடுகிறார் .அண்ணன் தம்பி இருவர் என்று தெரியாத அப்பு தன் தம்பியை கொலை செய்த அருள் நிதியை கொல்ல துடிக்கிறார்,வழக்கம் போல் சண்டைக்கு பின் அப்பு திருந்தி விடுகிறார் .
படத்தின் கதை மற்றும் திரைக்கதை எண்பதுகளில் வந்த ரஜினி ,கமல் படங்களை நினைவு படுத்துகிறது ,இயக்குனர் சாப்ளின் பழைய படங்களின் DVD களை பார்த்து விட்டு அங்கே பழைய நடிகர்களை எடுத்து விட்டு அருள் நிதியை நடிக்க வைத்திருக்கிறார் ,இடை வேளைக்கு பிறகு படம் எப்படா முடியும் என்று இருக்கிறது ,அவ்வளவு மொக்கையான திரைக்கதை ,எப்படித்தான் இந்த மாதிரி படங்களில் நடிக்க அருள் நிதிக்கு தைரியம் வந்ததோ ,இப்படியே இன்னும் ரெண்டு படங்களில் நடித்தால் அவரின் சினிமா வாழ்கை கேள்வி குறிதான். பாடல்களும் பெரிதாக எடுபடவில்லை ,இரைட்டை அர்த்தத்தில் பேசினால் காமடி என்று சந்தானத்திடம் யாரோ சொல்லி இருப்பார்கள் போல ,காமெடி இல்லை வெறும் காம நெடி தான்,
மேல் பட்டனை கழட்டி விட்ட எப்பேர் பட்ட ஆம்பளையும் கவுந்துடுவான் என்று ஷர்ட் மேல் பட்டனை கழட்டி விடும் கதாநாயகியின் தோழி ,மாமி பூனைக்கு வாலை வயுத்துல வரஞ்சு இருக்காங்க அது வாலு இல்ல பூ.. என்று சந்தானம் பச்சையாகவே பேசி இருக்கிறார் ,மொத்தத்தில் பழைய படத்தின் கதையாய் புது விதமாய் யோசிக்காமல் பழசாகவே எடுத்திருக்கிறார் இயக்குனர்.
09:02 | 0 comments | Read More

ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: சகோதரி அதிர்ச்சி தகவல்

Written By Latest News on Friday, 24 June 2011 | 23:23


யானை இறந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்து வதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.
அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். கலிபோர்னியாவில் அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார்.தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும்அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர்இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம்இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
23:23 | 0 comments | Read More

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை

"வேலாயுதம்", "நண்பன்" படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து, சீமான் இயக்கும் "பகலவன்" படத்தில் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கப்போவதாக ஒரு செய்தி அடிபடுகிறது. இந்தா, அந்தா, என கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டே வருகிறது சீமான், விஜய் கூட்டணி. "காவலன்" படத்தை அடுத்தே சீமானின் "பகலவன்" படத்‌தில் நடிக்க இருந்தார் விஜய். ஆனால் இடையில் இலங்கை தமிழர் பிரச்சனையில், அரசு எதிராக பேசியதற்காக சிறை சென்றார். இதனால் இந்தபடம் தள்ளிபோனது.

இதனையடுத்து விஜய், "வேலாயுதம்", "நண்பன்" படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதில் நடிக்க தொடங்கிவிட்டார். சிறைவாசம் முடித்து வந்த சீமான் உடனே "பகலவன்" படத்திற்கான வேலையை தொடங்க ஆரம்பித்தார். இதுதொடர்பாக விஜய்யையும் சந்தித்து பேசினார். இதனால் "நண்பன்" படத்தை அடுத்து, "பகலவன்" படத்தில் தான் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்யை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சந்தித்து பேசினார். அப்போது ஒரு அருமையான கதை ஒன்றை ‌ரெடி பண்ணி, அதை விஜய்யிடம் காண்பித்து இருக்கிறார். விஜய்க்கும் கதை பிடித்து போக அவரும் நடிப்பதாக கூறிவிட்டாராம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை விஜய், முருகதாஸ் நடிக்க ஒப்புக்கொண்டால் அவரது படத்தில், விஜய் நடிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
23:13 | 0 comments | Read More

சுராஜ் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா

சகுனி படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்து டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், அதில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் முதல் சிறுத்தை வரை நடித்த எல்லா படமே சூப்பர் ஹிட்டாகி முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்து விட்ட கார்த்திக்கு அடுத்த வாரம் ஜூலை 3ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்கிறார். திருமணம் நாள் நெருங்கிவிட்டதால் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் கார்த்தி, புதுமுக இயக்குநர் சங்கர்தயால் இயக்கும், சகுனி என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சகுனி படத்திற்கு அடுத்து கார்த்தி, தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. கார்த்திக்காக அருமையான கதை ஒன்றை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம் சுராஜ். மேலும் இந்தபடத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாகவும் ஒரு தகவல். ஏற்கனவே சிறுத்தை படத்திலேயே அனுஷ்கா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது அனுஷ்கா பிஸியாக வேறு படங்களில் நடித்து கொண்டிருந்ததால் கார்த்தியுடன் சிறுத்தை படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

முன்னதாக சிறுத்தையின் ஒரிஜனல் ரீ‌-மேக்கான விக்ரமார்க்குடு படத்தில் அனுஷ்கா தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
23:08 | 0 comments | Read More

அஜீத் பில்லா-2வில் 20வயது இளைஞனாக நடிக்கிறார்

 "மங்காத்தா" படத்தை தொடர்ந்து அஜீத், நடிக்கும் "பில்லா-2" படத்தில் 20வயது இளைஞனாக நடிக்கிறார். இதற்காக தனது ‌எடையை குறைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார் அஜீத். கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் "பில்லா". இப்படத்தின் இரண்டாம் பாகமாக பில்லா-2 எடுக்கப்படுகிறது. முதலில் இப்படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலகிகொள்ள, அவருக்கு பதிலாக சக்ரி டோல்டி டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார்.

தற்போது அஜீத், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "மங்காத்தா" படத்தில் நடித்து வருகிறார். அஜீத்தின் 50வது படமான இப்படம் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. "மங்காத்தா" படத்தை ரிலீஸ் செய்யும் முன் "பில்லா-2" படத்திற்கான வேலையில் இறங்கி இருக்கிறார் அஜீத். "மங்காத்தா" படத்தில் நரை முடியுடன் மாறுபட்ட வேடத்தில் நடித்து வரும் அஜீத், பில்லா - 2வில் 20வயது பையனாக நடிக்கிறாராம். இதற்காக தனது உடல் எடையை குறைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் அஜீத். மேலும் படத்தில் அஜீத்தை இளைஞனாக காட்ட ஹாலிவுட்டில் இருந்து பிரபல மேக்கப்மேன்களை வரவழைக்க உள்ளனராம். அந்த மேக்கப்மேன் அஜீத்துடன் தங்கி அவருக்கு தேவையான டிப்ஸ்களை கொடுப்பார். கடந்த வாரம் தான் "பில்லா 2" படத்தின் முதல் போட்டோ ஷூட் நடந்தது. "மங்காத்தா" படத்தின் ரிலீஸ்க்கு முன்பே "பில்லா-2" படம் துவங்க இருக்கிறது.
22:50 | 0 comments | Read More

கேப்டன் செய்திகள் சேனல் விரைவில் வருகிறது

சாதாரண நடிகராக திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்து, மாஸ் ஹீரோவாகி, அரசியல் கட்சி தொடங்கி, எம்.எல்.ஏ.ஆகி... இப்போது எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி விட்டார் விஜயகாந்‌த். தேமுதிக என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நேரத்தில், எந்த டி.வி., சேனலும் விஜயகாந்த் பற்றியோ, அவரது கட்சி பற்றியோ செய்தி வெளியிடவில்லை. கட்சித் தலைமையின் அன்றாட நடவடிக்கைகளை தொண்டர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக தனி சேனல் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு கேப்டன் டிவி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் செய்திகள் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்களுடனான சேனலாக ஒளிபரப்பான கேப்டன் டிவியில் பின்னர் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. சாதாரண அரசியல் கட்சியாக இருந்து இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்து விட்ட நிலையில், கட்சிக்கென்று தனி நியூஸ் சேனல் தொடங்க வேண்டும் என நினைத்த விஜயகாந்த், இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம். கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ் போன்று விரைவில் கேப்டன் செய்திகள் என்ற பெயரில் 24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கவுள்ளது கேப்டன் குழுமம். கேப்டன் செய்திகள் சேனலில் விஜயகாந்தின் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி, தேமுதிக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.
22:45 | 0 comments | Read More

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்

ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் பருமனாவதை தடுக்க முடியும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் பிளாக்ஸ்பர்க் நகரில் உள்ள வெர்ஜினியா பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பிரந்தா தவி தலைமையிலான குழுவினர் உடல் பருமனை குறைப்பதில் தண்ணீரின் பங்கு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரு பிரிவினருக்கு தினமும் 3 வேளை சாப்பிடுவதற்கு முன்பு 2 டம்ளர் தண்ணீர் வீதம் 12 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு தண்ணீர் கொடுக்காமல் சாப்பாடு கொடுக்கப்பட்டது.
12 வாரங்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்காதவர்களோடு ஒப்பிடும் போது தண்ணீர் குடித்தவர்களின் உடல் எடை 2.5 கிலோ வரை குறைந்து காணப்பட்டது தெரியவந்தது.
பசியின் போது தண்ணீர் குடிக்கும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்து விடும். அதே நேரம் இதில் கலோரி எதுவும் இருக்காது. இதனால் உணவின் அளவு குறைந்து கலோரியின் அளவும் குறைவதால் உடல் பருமன் குறைகிறது என தெரிவித்தார்.
எனினும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என துல்லியமாக குறிப்பிடவில்லை. பொதுவாக ஒரு நாளைக்கு தண்ணீர் உள்ளிட்ட திரவப் பொருள் பெண்களுக்கு 9 கப் அவசியம். ஆண்களுக்கு 13 கப் தேவை என பரிந்துரைக்கப்படுகிறது.
22:23 | 0 comments | Read More

விஞ்ஞானிகள் தகவல் சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த நிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியில் இருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிக அளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன.
அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
22:21 | 0 comments | Read More

எலுமிச்சையின் மூலம் மருந்து புற்றுநோய்க்கு விஞ்ஞானிகள் சாதனை

கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை. உலகம் முழுவதும் புற்றுநோய்க்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.
இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.
உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல் ஆபத்தான செல்கள் மற்றும் புற்றுநோயாக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.
கீமோ தெரப்பியை விட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை. மேலும் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது போன்ற வேலைகளையும் செய்யவல்லது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
22:18 | 0 comments | Read More

டீசல் லிட்டருக்கு ரூ. 3,கெரசின் லிட்டருக்கு ரூ.2,காஸ் சிலிண்டர் ரூ.50 அதிகரிப்பு


 டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாயும், கெரசின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, நேற்று கூடிய மத்திய அமைச்சர்கள் குழு வழங்கியது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

டீசல், சமையல் காஸ், கெரசின் விலை குறித்து முடிவு செய்வதற்காக, அமைச்சர்கள் அதிகார குழு கூட்டம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று இரவு நடந்தது. முதலில் பிற்பகல் ஒரு மணிக்கு நடப்பதாக இருந்த கூட்டம், மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெட்ரோலிய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டியுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதில், விலையை உயர்த்துவது குறித்து பல்வேறு அம்சங்கள், சுமையை மூன்று கட்டங்களாக சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்டு, விலை உயர்வுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் அதிகாரக் குழு கூடியது. இதில் டீசல், காஸ் சிலிண்டர், கெரசின் விலையை உயர்த்துவதற்கு அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து நிருபர்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
* காஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
* கெரசின் லிட்டருக்கு ரூ.2 கூடுகிறது
* கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 5 சதவீத சுங்க வரி நீக்கப்படுகிறது.
* டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி ரூ.4.60 லிருந்து ரூ.2 ஆக குறைக்கப்படுகிறது.
* சுங்க வரி நீக்கம் மற்றும் கலால் வரிகுறைப்பு காரணமாக மத்திய அரசுக்கு நடப்பாண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
* விலை உயர்வு காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ள கடன் சுமை ரூ. 21 ஆயிரம் கோடியாகும். இதற்கு முன் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 140 கோடியாக கடன் சுமை இருந்தது.

அமலுக்கு வந்தது: இந்த விலை உயர்வு , நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.40.16 ஆக உள்ளது. இது ரூ.43.16 ஆக உயர்ந்துள்ளது.

எதிர்ப்பு: இந்த விலை உயர்வுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கட்சிகள் கண்டனம்: பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் கருத்து தெரிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கண்டனம்:
திரும்பத் திரும்ப பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை. கெரசின், சமையல் கேஸ் உபயோகிப்பவர்கள் மிக சாதாரண மக்கள். இந்த விலை உயர்வு அவர்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கும். ஏற்கெனவே இந்தப் பொருள்களின் விலை மிக அதிகமாக உள்ளது. மேலும் சமீபத்தில்தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. விலை உயர்வு குறித்து மத்திய அரசு பல முறை நன்றாக சிந்திக்க வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு: பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தில்லியில் கூறினார்.

விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
-ஜெயலலிதா தமிழக முதல்வர்

விலையை உயர்த்தியது மனிதாபிமானம் அற்ற செயல்.
-நிர்மலா பாஜக


விலை உயர்வு குறித்து மத்திய அரசு பல முறை நன்றாக சிந்திக்க வேண்டும்.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர்


விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
-சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
22:08 | 0 comments | Read More