டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாயும், கெரசின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, நேற்று கூடிய மத்திய அமைச்சர்கள் குழு வழங்கியது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
டீசல், சமையல் காஸ், கெரசின் விலை குறித்து முடிவு செய்வதற்காக, அமைச்சர்கள் அதிகார குழு கூட்டம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று இரவு நடந்தது. முதலில் பிற்பகல் ஒரு மணிக்கு நடப்பதாக இருந்த கூட்டம், மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெட்ரோலிய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டியுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதில், விலையை உயர்த்துவது குறித்து பல்வேறு அம்சங்கள், சுமையை மூன்று கட்டங்களாக சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்டு, விலை உயர்வுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் அதிகாரக் குழு கூடியது. இதில் டீசல், காஸ் சிலிண்டர், கெரசின் விலையை உயர்த்துவதற்கு அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து நிருபர்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
* காஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
* கெரசின் லிட்டருக்கு ரூ.2 கூடுகிறது
* கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 5 சதவீத சுங்க வரி நீக்கப்படுகிறது.
* டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி ரூ.4.60 லிருந்து ரூ.2 ஆக குறைக்கப்படுகிறது.
* சுங்க வரி நீக்கம் மற்றும் கலால் வரிகுறைப்பு காரணமாக மத்திய அரசுக்கு நடப்பாண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
* விலை உயர்வு காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ள கடன் சுமை ரூ. 21 ஆயிரம் கோடியாகும். இதற்கு முன் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 140 கோடியாக கடன் சுமை இருந்தது.
* காஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
* கெரசின் லிட்டருக்கு ரூ.2 கூடுகிறது
* கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 5 சதவீத சுங்க வரி நீக்கப்படுகிறது.
* டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி ரூ.4.60 லிருந்து ரூ.2 ஆக குறைக்கப்படுகிறது.
* சுங்க வரி நீக்கம் மற்றும் கலால் வரிகுறைப்பு காரணமாக மத்திய அரசுக்கு நடப்பாண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
* விலை உயர்வு காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ள கடன் சுமை ரூ. 21 ஆயிரம் கோடியாகும். இதற்கு முன் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 140 கோடியாக கடன் சுமை இருந்தது.
அமலுக்கு வந்தது: இந்த விலை உயர்வு , நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.40.16 ஆக உள்ளது. இது ரூ.43.16 ஆக உயர்ந்துள்ளது.
எதிர்ப்பு: இந்த விலை உயர்வுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கட்சிகள் கண்டனம்: பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் கருத்து தெரிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கண்டனம்:
மம்தா பானர்ஜி கண்டனம்:
திரும்பத் திரும்ப பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை. கெரசின், சமையல் கேஸ் உபயோகிப்பவர்கள் மிக சாதாரண மக்கள். இந்த விலை உயர்வு அவர்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கும். ஏற்கெனவே இந்தப் பொருள்களின் விலை மிக அதிகமாக உள்ளது. மேலும் சமீபத்தில்தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. விலை உயர்வு குறித்து மத்திய அரசு பல முறை நன்றாக சிந்திக்க வேண்டும்.
இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு: பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தில்லியில் கூறினார்.
விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
-ஜெயலலிதா தமிழக முதல்வர்
விலையை உயர்த்தியது மனிதாபிமானம் அற்ற செயல்.
-நிர்மலா பாஜக
விலை உயர்வு குறித்து மத்திய அரசு பல முறை நன்றாக சிந்திக்க வேண்டும்.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர்
விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
-சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
விலையை உயர்த்தியது மனிதாபிமானம் அற்ற செயல்.
-நிர்மலா பாஜக
விலை உயர்வு குறித்து மத்திய அரசு பல முறை நன்றாக சிந்திக்க வேண்டும்.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர்
விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
-சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

No comments:
Post a Comment