ZTAMIL தமிழ் செய்திகள்

சிக்கல் நீங்கியது தனுஷூன் வேங்கை படத்திற்கு

Written By Latest News on Thursday, 30 June 2011 | 19:17

தனுஷூன், "வேங்கை" படத்தின் தலைப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, "வேங்கை" படத்திற்கான சிக்கல் தீர்ந்தது. ஹரி இயக்கத்தில், தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேங்கை". இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், "வேங்கை" படத்தின் தலைப்பை பயன்படுத்த கூடாது என்று கலைராஜன் என்பவர் சிலதினங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில் எங்களது நிறுவனத்தின் சார்பில், "வேங்கை" என்ற படத்தை தயாரிக்கிறோம். இதுதொடர்பாக இப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளோம். அப்படி இருக்கையில், இப்போது தனுஷ், தமன்னா நடிப்பில் "வேங்கை" என்ற படம் உருவாகியுள்ளது. எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கூறியிருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி, "வேங்கை" படத்தின் தலைப்பை உபயோகப்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வேங்கை படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ஆடியோ ரிலீஸ் கூட நடந்துவிட்டது. இனிபோய் படத்தின் தலைப்பை மாற்றுவது என்பது சாத்தியமற்றது. எனவே வேங்கை படத்தின் தலைப்பை தொடரலாம் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகளின் உத்தரவையடுத்து வேங்கை படத்திற்கான சிக்கல் தீர்ந்தது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment