ZTAMIL தமிழ் செய்திகள்

தொடர் செய்திகள்

Bajaj Auto launches Nano car for little Car more than,பஜாஜ் ஆட்டோ நானோவை விட குட்டிக் காரை அறிமுகப்படுத்தியது

Written By Latest News on Tuesday, 3 January 2012 | 07:19

பஜாஜ் ஆட்டோ நானோவை விட குட்டிக் காரை அறிமுகப்படுத்தியது


ஆர்இ-60 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த குறைந்த விலை காரில் 4 பேர் பயணம் செய்யலாம்.

சோதனை நிலைகளில் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் செல்வதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தினசரி பயன்பாட்டின்போது கூட லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று கருதப்படுகிறது.

இந்த காரில் ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட 200சிசி காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய குட்டிக் காரில் 44 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி மற்றும் இருக்கைகளுக்கு கீழ் 95 லிட்டர் ஸ்டோரேஜ் பகுதியும் இருக்கிறது.

தற்போது உலகின் குறைந்த விலை கார் என்ற பெருமையை பெற்றுள்ள டாடா நானோவை விட இந்த கார் குறைந்த விலை கொண்ட காராக விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது.

ரினால்ட்-நிசான் கோரினால் இந்த புதிய குட்டிக் கார் தயாரித்து வழங்கப்படும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய குட்டிக் கார் ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த புதிய கார் எல்பிஜி வெர்ஷனிலும் கிடைக்கும் என்று தெரிகிறது.

புதிய குட்டிக் கார் ரூ.1.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய குட்டிக் கார் மூலம் 4 சக்கர வாகன தயாரிப்பிலும் பஜாஜ் ஆட்டோ நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bajaj Auto launches Nano car for little Car more than,பஜாஜ் ஆட்டோ நானோவை விட குட்டிக் காரை அறிமுகப்படுத்தியது
07:19 | 0 comments | Read More

SSLC exam will start from april 4 , புதிய செய்தி ஏப்ரல் 4, 10ம் வகுப்புத் தேர்வு தேர்வுத் துறை அறிவிப்பு

புதிய செய்தி ஏப்ரல் 4,  10ம் வகுப்புத் தேர்வு தேர்வுத் துறை அறிவிப்பு


ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது

தேர்வு அட்டவணை விவரம் வருமாறு,

4-4-12 : தமிழ் முதல் தாள்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்

இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSLC exam will start from april 4 and end on 23rd of the same month in Tamil Nadu
06:58 | 0 comments | Read More

கணவன் கண்ணீர், தொழிலதிபருடன் நடிகை ஓட்டம்

Written By Latest News on Friday, 29 July 2011 | 19:18

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் தன் மனைவி மீனா ஓடி விட்டதாக அவரது கணவர் போலீசில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். துணை நடிகையான மீனாவின் கணவர் பெயர் ராஜா. நாகர்கோவிலை சேர்ந்த அவர் சென்னை விமான நிலைய போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அதில், என்னுடைய மனைவி மீனா (27). துணை நடிகை. அவர் கடந்த 24.4.2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் தங்கியிருந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, கடந்த 23ம்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நடிகை மீனாவுக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் துபாயில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. மீனாவின் கணவர் ராஜாவுக்கு  ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த போலீசார், கேரள தொழிலதிபருடன் மீனா சென்றாரா? அல்லது யாராவது அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார்களா என்கிற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்
19:18 | 0 comments | Read More

தெய்வத் தெய்வதிருமக(ன்)ள் திரை விமர்சனம்

Written By Latest News on Friday, 15 July 2011 | 19:56

ஒரு கேரக்டருக்காக தன் உடலையே வருத்தி மாற்றிக்கொள்ளும் பிறவி நடிகன் விக்ரம், மதராசப்பட்டிணம் என்ற வித்தியாசமான படத்தை வழங்கிய இயக்குநர் விஜய் இணைந்து ட்ரெய்லரிலேயே மிரட்டும் படம் என்பதால், நீண்டநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம். நாளை காலை படம் ரிலீஸ்..விமர்சனம் உங்களுக்காக இன்றே ரிலீஸ்..ரிலீஸ்..ரிலீஸ்!
ஊட்டி அருகே ஒரு கிராமத்தில் வாழும் மன வளர்ச்சி குன்றிய விக்ரமிற்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, ஆனால் விக்ரமின் காதலி+மனைவி பிரசவத்தில் இறக்கிறார்.  மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர். அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது. 


விக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா என்பதே கதை.

விக்ரமின் நடிப்பில் மற்றொரு மைல்கல் இந்தப் படம். மனவளர்ச்சி குன்றியவராக அவர் காட்டும் மேனரிசங்கள் அற்புதம். ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம். விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொரு நகக்கணுவும் நடிக்கின்றது. எந்த வித ஹீரோயிசமும் செய்யாமல் தெய்வத் திருமகனாக வாழ்ந்திருக்கிறார். குழாயில் ஒழுகும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் ‘நார்மல்’ மக்கள் கடப்பதும், விக்ரம் அதை மூடுவதும் ஒரு நிமிடத்தில் நமக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் காட்சி. மனைவி இறந்த செய்தி கேட்டு, அவர் கொடுக்கும் க்ளோசப் எக்ஸ்பிரசன் நம்மையும் கண்கலங்க வைக்கிறது. 

தெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான்.


அருந்ததிக்கு அப்புறம் அனுஷ்காவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ளபடம். கதையின் முக்கியப் பாத்திரமாக வருகிறார். ’விழிகளில்’ பாடலில் அனுஷ்கா அழகோ அழகு. இந்த அளவிற்கு அவரைக் குளோசப்பில் வேறு யாரும் காட்டியதும் இல்லை. விக்ரமை குழந்தையுடன் சேர்த்து வைக்க அவர் நடத்தும் போராட்டத்திற்கும் படத்தின் ஓட்டத்திற்கும் உறுதுணையாக சந்தானம். வழக்கம்போல் ஒருவரிக் காமெடியால் கலக்குகின்றார். அமலா பாலிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. காலை-மாலை மட்டுமே யூஸ் ஆகும் ஆவின் பால் ரேஞ்சுக்கே டீல் செய்திருக்கிறார்கள்.

ஊட்டி கதைப்பகுதியில் காமெடிப் பொறுப்பு ஏற்பது எம்.எஸ்.பாஸ்கரும் பாண்டுயும். வழக்கமான பொண்டாட்டி மேல் சந்தேகபப்டும் காமெடி தான் என்றாலும், சீரியசான படத்தில் பெரிய ரிலீஃப் அது தான். வில்லன் வக்கீலாக வரும் நாசர் கம்பீரமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார்.

மனவளர்ச்சி குன்றிய ஹீரோ என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், டிராமா போன்ற கதை தான். அதனாலேயே முதல் பாதியில் கொஞ்ச நேரமும் இடைவேளைக்கு அப்புறம் கொஞ்ச நேரம் சீரியல் போன்று நகர்கிறது. பிறகு மீண்டும் கோர்ட்-சவால் என படம் சூடு பிடிக்கின்றது. டீசண்டான அனுஷ்கா கேரக்டருக்கு டூயட் சாங் போட்டதும் மிகப்பெரிய குறை தான். அது இல்லாமலேயே இந்தப் படத்தை ரசிக்க முடிகின்றது. கிளைமாக்ஸும் செண்டிமெண்ட்டாக இருந்தாலும், அவ்வளவு திருப்தியான முடிவு இல்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாப்பா, வெண்ணிலவே பாடல்கள் நன்றாக உள்ளன. கதை சொல்லும் பாடல் கேட்க சுமார் என்றாலும் எடுத்திருக்கும் விதம் குழந்தைகளையும் கவரும். பாட்டி வடி சுட்ட கதையை ராஜா கதியுடன் மிக்ஸ் பண்ணி விக்ரம் சொல்லும் அழகும், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிய விதமும் அழகு.



கள்ளங்கபடமற்ற அன்பை படம் முழுதும் தெளித்து நம்மைப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். படம் நெடுகெ மெல்லிய நகைச்சுவை பரவிக்கிடக்கிறது, அதுவே இப்படத்தை ஃபீல் குட் வகையில் சேர்க்கிறது. 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சென்னையைக் கூட(!) அழகாகக் காட்டுகிறார். 

வழக்கமான கதைகளை எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து வித்தியாசமான களத்தில் முயற்சிக்கும் இயக்குநர் விஜய்யைப் பாராட்டலாம். குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், ஃபைட் இல்லாமல் ஒரு படம் பண்ண மிகவும் தைரியம் வேண்டும். அதற்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனையும் பாராட்டலாம்.

குடும்பத்துடன் தான் படம் பார்ப்பேன் என்று அடம்பிடிப்போருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. விட்டுவிட வேண்டாம். 

19:56 | 0 comments | Read More

ஆபாச தளங்களிலிருந்து உங்கள் கணினியில் தடுக்க எளிய வழி

இணையத்தில் எவ்வளவுதான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும். 
மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணினியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும் .
கீழே நீங்கள் படத்தில் காட்டப்படுள்ள வற்றினை பின்பற்றி செய்யலாம் 



1.GO TO Control panel 
2.click network and sharing center 
3.click on local area connection




 click the propeties button 
 select internet protocol version4 AND CLICK PROPERITES BUTTON
 படத்தில் காட்டப்பட்ட  இலக்கத்தினை படத்தில் உள்ளது  போல்  பதிவு  செய்து  OK  பட்டன் கிளிக்  செய்து பின்னர்  அனைத்தையும்  மூடுக. 
 இப்போது ஆபாச தளங்களை திறந்தால்  கீழே உள்ளது போல் தோன்றும்.
இந்த  செயல் முறை  விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கே  பொருந்தும்; விண்டோஸ்  ஏனைய பதிப்புகள், மாக்  லினக்ஸ்  மற்றும் மொபைல் போன்றவற்றில் அபாச தளங்களை  தடுக்க  வழியினை இந்த  தளத்தில்  சென்று  உங்கள் ஈமெயில் முகவரியினை  கொடுத்து தளத்தின்  உள்ளே  சென்று பெறலாம்.
https://store.opendns.com/familyshield/
19:45 | 0 comments | Read More

கூகுள் + உபயோகிக்க கீபோர்ட் ஷார்ட்கட் கீகள்


பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்க போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள சமூக இணைய தளம் தான் கூகுள் பிளஸ். தற்போது இணையத்தில் எங்கு பார்த்தாலும் கூகுள் பிளஸ் என்ற குரல் தான் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த சமூக இணைய தளத்தில் வசதிகள் ஏராளம். இன்னும் பல வசதிகளை கூகுள்  புகுத்தப்பட உள்ளது. இந்த வசதிகளை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம் இந்த வரிசையில் இன்று கூகுள்+ சுலபமாக உபயோகிக்க நம்முடைய கீபோர்ட் ஷார்ட்கட் கீகள் என்ன வென்று தெரிந்து கொள்ளலாம்.

KEYBOARD SHORTCUTS
GOOGLE+ EFFECT
@
ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் பகிர  @சசிகுமார்
q
இரண்டு முறை அழுத்தினால் உங்கள் chat Window தேர்வாகும்.
Space
கூகுள்+ விண்டோவில் கீழே போக 
Shift + Space
கூகுள்+ விண்டோவில் மேலே போக 

Enter
ஏதாவது ஒரு Stream படிச்சிக்கிட்டு இருக்கும் பொழுது Enter கொடுத்தால் கமென்ட் பகுதி தேர்வாகும்.
Tab + Enter
நீங்க டைப் பண்ண கமென்ட் முடிவுக்கு வரும்.

J
சமீப அப்டேட் Stream அழைத்து செல்லும். திரும்பவும் அழுத்தினால் அடுத்த Stream க்கு அழைத்து செல்லும்.
K
முன்பு பார்த்த Stream க்கு அழைத்து செல்லும்.


* (Bold)
*வணக்கம்* இப்படி கொடுத்தால் இடையில் உள்ள வார்த்தை வணக்கம்என தெரியும்.
_ (Italic)
_வணக்கம்_ இது போல கொடுத்தால்வணக்கம் என தெரியும் 
-
-வணக்கம்- இது போல கொடுத்தால்வணக்கம் என வரும் 


இனி இந்த கீபோர்ட் சார்ட் கட் கீகளை பயன்படுத்தி கூகுள் பிளசை சுலபமாக பயன்படுத்துவோம்.

19:27 | 0 comments | Read More

நம் கணினியில் கண்களின் பார்வை திறனை இலவசமாக பரிசோதிக்க


எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் புற்றீசல் போல உருவாகின்றன. இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஆன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம் என இங்கு பார்க்கலாம்.

கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஆன்லைன் பரி சோதிப்போம் வாருங்கள்.
  • உங்கள் கணினி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும். 
  • உங்கள் கணினியில் Flash Player இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். 
  • அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள் கொடுக்க பட்டிருக்கும். 
  • அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு பகுதி தெரியும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்கள் கணினி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கணினி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும். 
  • அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.
  • ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே சாலச்சிறந்தது.
19:25 | 0 comments | Read More